பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தற்போது தலைவிரித்தாடுவதாக பொதுபலசேனா எச்சரித்துள்ளது.
இலங்கையில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயங்களா எனவும் அவ் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
இராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் பேதே பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் விஸ்தரித்துள்ளது.
கிந்தோட்டை சம்பவம் ஒரு சாதாரண விபத்தை மையப்படுத்தியது.
அதிகளவில் மாணிக்கக்கல் வியாபாரிகள் கூடும் கிந்தோட்டையில் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதுடன் வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலைமையில் விபத்துக்கள் இடம்பெறுவது பொதுவானது, ஒரு சாதாரண விடயத்தை மையப்படுத்தி திட்டமிட்ட அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதென ஊடக சந்திப்பில் கலசந்துகொண்டு கருத்துத்தெரிவிக்யைில் அவர் மேலும் தெரிவித்தார்.