பிரதான செய்திகள்

பயங்கரமான சூழ்நிலைக்குள் தள்ளிய மகிந்த ராஜபக்சக்களுக்கு மீண்டும் அரசியல் அதிகாரம்

வெள்ளை வான் கலாசாரத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை பயங்கரமான சூழ்நிலைக்குள் தள்ளிய மகிந்த ராஜபக்சக்களுக்கு மீண்டும் அரசியல் அதிகாரம் தேவையா என பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.


திருகோணமலை பகுதியில் இன்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

முப்பது வருட கால யுத்தத்தின் பின் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஊடாக கோத்தாபாய போன்றோர்களே சிறுபான்மை சமூகத்தை நாசமாக்க முனைந்தார்கள். இவ்வாறானவர்களே மீண்டும் ஜனாதிபதியாக வர முயற்சிக்கிறார்கள்.

இவர்களை நாங்கள் நிராகரித்து அனைத்து சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற அன்னச்சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும். அன்னத்திற்கு வாக்களிப்பதனால் தான் அங்கீகாரமுடைய நாட்டு மக்களின் நிலையை உணர்ந்த ஜனாதிபதியை காண முடியும்.

ஜனநாயக ரீதியாக சிந்தித்து அச்சமின்றி வாக்களிப்பதனால் இரவிலும் பகலிலும் நிம்மதியாக தூங்க முடியும். கோத்தபாய ஜனாதிபதியாகினால் நிம்மதியாக தூங்க முடியாது. இந்த தேர்தல் வாழ்வா? சாவா? என்கின்ற நிலையில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Related posts

சமூக சேவையாளர் அஷ்ரப் ஹூசைன் காலமானாா்.

wpengine

உள்ளூராட்சி மன்ற அரச ஊழிய வேட்பாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாதது ஏன்?பாராளுமன்றில் சஜித் கேள்வி

Editor

சமூகங்களுக்கிடையில் எந்தப்பிரச்சனைகளும் பிளவுகளும் வராமல் பாதுகாத்து வருகின்றோம்.

wpengine