மலேஷியா ஈப்போவில் கடந்த வாரம் நடைபெற்ற ‘ஆசியா டாவோஸ்’ (Davos of Asia) என்று அழைக்கப்படும் ;பன்ங்கோர் சர்வதேசஅபிவிருத்தி கலந்துறையாடல் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலங்கை சார்பில் பங்கேற்றார்.
இது நிலையான அபிவிருத்தி இலக்குக்கேற்ப நீடித்த பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்குவிப்பதற்காக நடத்தப்பட்டஉலகளாவிய ரீதியிலான அறிவு மற்றும் கருத்து பரிமாற்றல் நிகழ்வாகும்.
நான்காவது ஆண்டு நடைபெறும் இந்நிகழ்வில் 15க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக்கொண்டன. பேராக் இன்ஸ்டிட்யூட் தாருல்ரிட்சென் நிறுவனம் மற்றும் மலேஷியா பேராக் அரசாங்கத்தின் வடக்கு வளாக நடைமுறைப்படுத்தல் அதிகார சபையும் கூட்டாகஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் 2000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மத்தியில் இவ்வாண்டு- 2006 நோபல் பரிசு பெற்ற கிராமின்வங்கி நிறுவுனர் பேராசிரியர் முகமதுயூனுஸ் அவர்களும் கலந்துக்கொண்டார்.
கினி குடியரசின் அமைச்சர் பேராசிரியர் டத்தோ சனோ கௌடப் முஸ்தபா மற்றும் இந்தியாவின் நாகாலாந்து மாநில முதல்வர்டி.ஆர் சிலைன்ங் உட்பட வெளிநாட்டு உயர் அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்:
நிலையான அபிவிருத்தி இலக்குக்கேற்ப நீடித்த பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட உலகளாவியரீதியிலான அறிவு மற்றும் கருத்து பரிமாற்றல் நிகழ்வில் இலங்கை சார்பாக கலந்துக்கொள்வதில் நான்பெருமகிழ்சியடைகின்றேன.; இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கியகூட்டு தலைமையின் கீழ் முக்கிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் காலப்பகுதியில் நுழையும் நேரத்தில் இந்நிகழ்வுநடைபெறுகிறது ஆகவே எமக்கு வாய்ப்புகள் அதிகமாக காணப்படும் என நம்புகின்றேன். இலங்கை வளர்வதற்கான வாய்ப்புகள்அதிகமாக இருக்கிறது. மேலும் நாட்டின் தலைமை மாறிய பிறகு பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றங்களும்; ஏற்பட்டுள்ளதுஎன தெரிவித்தார்.
பன்ங்கோர் கலந்துரையாடல் செயலகத்தின் உயர் அதிகாரி ரையிஸ் உவைஸ் இங்கு கருத்து தெரிவிக்கையில்: நிலையானஅபிவிருத்தி இலக்குகளை ஏற்ப நீடித்த பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கும் நோக்கமாக இந்த கலந்துரையாடல் நடைபெறுகிறது. ‘நிலையான எதிர்காலத்திற்காக மீளும் தன்மையினை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் இக்கலந்துரையாடல் பரந்த நிலையான எதிர்கால இணைப்புகளை உருவாக்குவதற்காக சவால்களை இணங்காணுவதற்கும் பின்னடைவான சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கும் பயன்பெறத்தக்கதாக இருக்கும்.
1000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் 50 சர்வதேச பேச்சாளர்கள் பங்கேற்ற இக்கலந்துயாடல், பொருளாதாரம், சமூக கல்வி,சூழல், பெண்கள் மற்றும் இளைஞர், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு உட்பட ஆறு பிரிவுகளில் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்ரையாடல் அனைத்து பங்குதாரர்களின் நலன்கள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய பரிந்துரைகளை வழங்குகிறது.பன்ங்கோர் கலந்ரையாடல் சர்வதேச பங்குதாரர்கள் இடையே கூட்டிணைவிணை உருவாக்கும் ஒரு இடமெனவும்நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அனைத்து பங்குதாரர்களின் ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவதற்கான ஒரு தளத்தினையும்வழங்குகிறது. உலகெங்கிலும் இருந்து வரும் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்வல்லுனர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவதற்கும் வளர்ச்சி மற்றும் பேண்தகைமை தொடர்பானபிரச்சினைகள் பற்றி விவாதிக்க பன்ங்கோர் கலந்துரையாடல் முக்கியமாக விளங்கிறது என்றார் உவைஸ்.
கடந்த ஆண்டு பன்ங்கோர் தீவில் நடைபெற்ற மூன்றாவது கலந்துரையாடல் 16 நாடுகளை ஈர்த்தது.