Breaking
Sat. Nov 23rd, 2024

பனை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பல மில்லியன் ரூபா நிதி பனை அபிவிருத்தி சபையின் தற்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜாவினால் ஊழல் மோசடி மூலம் சூறையாடப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி செலஸ்ரீன் ஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கிற்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பனை அபிவிருத்தி சபை தலைவருக்கு எதிராக அவரது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகத் தான் வழக்கினை பதிவு செய்துள்ள நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சபையின் தலைவர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காததன் காரணமாக திகதியிடப்பட்டுள்ளது.

பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகளை மேற்கொண்டுள்ளார். அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களைப் பனை அபிவிருத்தி சபையின் யாழ்ப்பாண காரியாலயத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தி மிரட்டி அலமாரியினை உடைத்து தலைவருக்கு எதிரான ஆவணங்கள் அனைத்தையும் கொழும்பிற்கு எடுத்துச்சென்று அழித்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையின் சொத்துக்களை தனியொருவர் சூறையாடுவதை அனுமதிக்க முடியாது. எனவும் பொதுநபராக தான் இதற்கு வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கின் மூலம் அவரது ஊழல்கள் அம்பலமாக உள்ளத்துடன் சபைக்குப் பொறுப்பான மத்திய அரசின் அமைச்சர் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஏன் மௌனம் காட்டுகிறார்? பனை அபிவிருத்திச் சபையின் மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டி கொடுக்க முடியும்.

ஆனால் தற்போதுள்ள தலைவர் போன்றவர்களின் ஊழல் நடவடிக்கையின் காரணமாகப் பனை அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகள் மிகவும் பூச்சிய நிலையில் காணப்படுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி கரிசனை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *