பிரதான செய்திகள்

பத்து பேருக்கு மேல் கூட்டாக செல்லக்கூடாது

ஒரு தடவைகளில் கூட்டமாக பத்து பேருக்கு மேல் வாக்கு கோரி வீடுகளுக்கு செல்ல முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரிப்பது தொடர்பில் சில வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்கும் வேட்பாளர்கள் அல்லது ஆதரவாளர்கள் பத்து பேருக்கு மேல் கூட்டமாக செல்ல முடியாது, அவ்வாறு சென்றால் அது சட்டவிரோதமானதாகும்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 25 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரையில் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் வேட்பாளர்களாவர்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 12 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாத வாகனங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது சட்டவிரோதமானது.
இன, மத, குரோத அடிப்படையிலான பிரச்சாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக நாடு முழுவதிலும் 1041 ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேசியப் பட்டியல் எம்.பி.தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்.

wpengine

மன்னாரில் இடைப்போகம் நெற்பயிர் செய்கைக்கு தடை! மன்னார் அதிபர்

wpengine

தொண்டமான் ஐக்கிய தேசிய கட்சிவுடன் இணையக்கூடிய சாத்தியம்

wpengine