பிரதான செய்திகள்

பத்து கோடி ரூபா நிதியில் தெரு விளக்கு திறந்து வைத்த ஹிஸ்புல்லாஹ்

முன்னாள் ஆளுநரும் முன்னால் பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி MLAM ஹிஸ்புள்ளா அவர்களது பத்துக்கோடி ரூபா விசேட நிதிஒதுக்கீட்டில் மஞ்சந்தொடுவாய் ஆரையம்பதி உட்பட்ட காத்தான்குடி ஊர்வீதிக்கான நவீன மின்விளக்குகள் பொருத்தும் பணி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மணிக்கப்பட்டு , காத்தான்குடி நகரமுதல்வர் SHM அஸ்பர் JP, நகரசபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரது பிரசன்னத்துடன் நேற்று 12/02/2021 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் முன்னாள் ஆளுநர் MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்று முதல் தினமும் மாலை 6மணிமுதல் காலை 6மணிவரை தானியங்கிமுறையில் இந்த மின்விளக்குகள் காத்தான்குடி ஊர் வீதியை ஒளியூட்டவுள்ளன.

-தவிசாளர் ஊடகப்பிரிவு –

Related posts

முன்னால் அமைச்சர் றிஷாட் கொண்டுவந்த தையல் இயந்திரங்களை மஸ்தான் வழங்கினார்.

wpengine

தந்தை மற்றும் மகன் கொலை – 27 மற்றும் 23 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது.

Maash

நவகமுவ பிக்கு விவகாரம் – 8 பேரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

Editor