பெங்களூரில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இனந்தெரியாதோரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பெங்களூரில் வெளிவரும் லங்கேஷ் எனும் பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பபட்டுள்ளார். மாலை 6.30 மணியளவில் இக்கொடிய சம்பவம் நடந்துள்ளது.
மிகவும் துணிச்சலான பத்திரிகையாளராக அறியப்பட்டவர் கெளரி. அவரை மிகக் கோழைத்தானமாக சுட்டுக் கொன்றுள்ளனர் கொலையாளிகள். வெளியே போய் விட்டு வீட்டுக்குத் திரும்பிய கெளரி, காரை விட்டு இறங்கி வீட்டு கேட்டை திறந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கெளரிக்கு மிக நெருக்கமாக சென்று சுட்டுள்ளனர். 7 முறை அவர் மீது சுடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
கன்னட பத்திரிகையான லங்கேஷ் பத்திரி கையை நடத்தி வந்தவர் கெளரி. மிகத் தைரியமாக பேசக் கூடியவர், எழுதக் கூடிய வர். யாருக்கும் அஞ்சாத துணிச்சல்காரர்.
இதனால் அவருக்கு எதிரிகள் அதிகம். குறிப்பாக மதவெறியர்களிடமிருந்து பெரும் மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.