பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 23 ஆவது ஆசிய பொலிஸ் மா நாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று நேபாளத்தின் கத்மண்ட் நகரை நோக்கி புறப்பட்டார்.
இந் நிலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீள நாட்டுக்கு திரும்பும் வரை பதில் பொலிஸ் மா அதிபராக பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கடமையாற்றுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.