அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம் .

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராகவும், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராகவும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மன்னாரில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலை உடைப்பு, ஒருவர் கைது..!

Maash

சுமார் 200 இடங்களில் தேடியும் கிடைக்காத செவ்வந்தி, இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம்..!

Maash

முஸ்லிம்களின் தனித்துவத்தினை இவ்வுலகுக்கு அடையாளப்படுத்திய மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் பயணம்

wpengine