பிரதான செய்திகள்விளையாட்டு

பதிலடி கொடுக்குமா இலங்கை ? ; இரண்டாவது போட்டி இன்று

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்று தென்னாபிரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

ஆடுகளம்

ஆடுகளத்தை பொறுத்தவரையில் போர்ட் எலிசபத் மைதானத்தை விட துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிகமான சாதகத் தன்மையை கொண்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணி விபரம்

இன்றைய போட்டியை பொறுத்தவரையில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார அணியில் இணைத்துக்கொள்ளும் வாய்ப்புள்ளதுடன், தென்னாபிரிக்க அணியில் எவ்வித மாற்றங்களும் இடம்பெற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உத்தேச அணி ;

இலங்கை அணி

1.உபுல் தரங்க (தலைவர்), 2.தினேஷ் சந்திமல், 3.நிரோஷன் டிக்வெல்ல, 4.சந்துன் வீரகொடி, 5.குசால் மெண்டிஸ், 6.தனஞ்சய டி சில்வா, 7.அசேல குணரத்ன, 8.நுவான் குலசேகர, 9.லஹிரு குமார, 10.சுராங்க லக்மால்,11.லக்ஷான் சந்தகன்

தென்னாபிரிக்க அணி

1. குயின்டன் டி கொக், 2.ஹசிம் அம்லா, 3.பெப் டுபிளசிஸ், 4.டிவில்லியர்ஷ் (தலைவர்), 5. ஜே.பி.டுமினி, 6.டேவிட் மில்லர், 7. கிரிஷ் மொரிஷ், 8.வயன் பார்னெல், 9.அண்டிலே பிஹில்குவாயோ, 10.காகிஷோ ரொபாடா, 11.இம்ரான் தாஹீர்

Related posts

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா

wpengine

ஊடரங்கு சட்டம் மீண்டும் 20ஆம் திகதி வரை

wpengine

பெண்கள் வாட்ஸ்அப் தொல்லையிலிருந்து தப்பிக்க 5 டிப்ஸ்!

wpengine