பிரதான செய்திகள்

பதியுதீனுடன் அரசாங்கத்துடன் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் அரசாங்கம் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்பதை நான் உறுதிபட தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை விஷேட அறிவித்தலொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,


நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதல் மற்றும் முக்கிய பொறுப்பாகும்.

கடந்த காலங்களில் நடந்ததைப் போல, மக்களை கைது செய்யும் அல்லது விடுவிக்கும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்க நாம் தயாராக இல்லை.


அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது திணைக்களங்கள் விடும் குறைபாடுகள் அல்லது தவறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் அரசாங்கத்துடன் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன்.


நாட்டு மக்கள் எம்மீது இதுவரை வைத்திருந்த நம்பிக்கை வீணாகாமல் அதனை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

Related posts

கல்வி தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் உடன்படிக்கை

wpengine

முஸ்லிம் மதகுருவை நாடுகடத்தும் பிரான்ஸ் அரசு

wpengine

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்தல் விண்ணப்பம் திகதி நீடிப்பு

wpengine