ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனவே தற்போது எவ்விதமான தயக்கமும் இன்றி நல்லாட்சி அரசாங்கத்தின் சர்வதேச அடிமைத்தனத்தை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து நீதி கோரலாம் என எதிரணியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர கட்சியின் அரசியல் ரீதியிலான பழிவாங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விரைவில் கூடி தீரமானம் எடுப்போம். கட்சியில் இருந்து நீக்கினாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிட போவதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது சம்மேளனத்தில் கலந்துக் கொள்வதற்கான அழைப்பு இது வரையில் கிடைக்கப்பெறாத நிலையில் தற்போது அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமையினால் அதற்கு செல்வதற்கான தீர்மானம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.