பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச அடுத்த சில மணிநேரங்களில் விலகக்கூடும் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரதமர் பதவி விலகவுள்ளார்.
11 கட்சிகளின் சந்திப்பை தொடர்ந்து அந்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளனர். இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினேஸ் குணவர்த்தன பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசில் ராஜபக்சவிற்கு பதில்; புதிய நிதியமைச்சராக ஹர்சா டி சில்வா நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெய்லிமிரர்