பிரதான செய்திகள்

பண்டிகை காலத்தையொட்டி பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்!

பண்டிகை காலத்தில் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றமை, விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற துரித இலக்கத்திற்கு அறியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினர் இதனை தெரிவித்துள்ளனர். பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் விவகார அதிகார சபையினர் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதான மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், களஞ்சியங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், நடமாடும் வர்த்தகர்களையும், மலிவு விற்பனை சந்தைகளையும், சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Related posts

12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம்! பின்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு

wpengine

ஹக்கீமை பொறுத்தவரையில் அவரின் மரணத்துடன் கட்சியும் மரணிக்க வேண்டும்

wpengine

பட்ஜட்; ஆதாய வழிகளை அடைய வழிகோலுமா?

wpengine