செய்திகள்பிரதான செய்திகள்

பண்டிகை காலத்தில் சட்டங்களை மீறிய 1200 சில்லறை வியாபாரிகளுக்கு சட்டநடவடிக்கை.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய 1,200 இற்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபைத் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த மாதம் 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பிரகாரம் குறித்த சில்லறை வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, விலைகளைக் காட்சிப்படுத்தாமை நுகர்வோரை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் சுமார் 25 சில்லறை வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்க தயார்

wpengine

முன்னால் அமைச்சரின் நீதி ஒதுக்கீட்டில் பாடசாலை நுழைவாயில்

wpengine

இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் ஒரு மைல் கல் அமைச்சர் றிஷாட்

wpengine