பிரதான செய்திகள்

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500 மேலதிக பஸ்களை இயக்கத் திட்டம்.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பஸ் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500 மேலதிக பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

இந்த திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும், இதன் முதல் கட்டம் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும்.

புத்தாண்டு முடிந்து தங்கள் ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்குத் திரும்புவதற்காக, ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவை இயக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Related posts

105 நாட்களுக்கு மூடப்பட்ட பாடசாலை நாளை மாணவர்கள் இல்லாமல் ஆரம்பம்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் கட்டார் நிகழ்வு இடமாற்றம்

wpengine

அரிய வகை நோயினால் அவதிப்படும் இரு குழந்தைகள்!

wpengine