Breaking
Wed. Nov 27th, 2024
இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, பொலிஸ் திணைக்களத்தின் இரண்டு பணியாளர்களை அச்சுறுத்தும் காட்சிகளை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் சீசீடிவி காணொளியின் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளே இன்று குறித்த இணைத்தளத்தில் வெளியாகியுள்ளன

காலை நேர தியான பயிற்சிகளுக்கான ஒழுங்குகளை மீறியமைக்காகவே அவர்களை பொலிஸ் மா அதிபர் அச்சுறுத்துவதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது

கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதியன்று இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

காட்சிகளின்படி பொலிஸ் மா அதிபர் இரண்டு பணியாட்களின் சட்டைகொலர்களை பிடித்து அவர்களை அடிக்கும் வகையில் செயற்படுகிறார்

எனினும் இது குறித்து கருத்துரைத்துள்ள பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேரக இது ஒரு சாதாரண சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் காலையில் 10 நிமிட தியானத்தில் ஈடுபட வேண்டும் என்று பொலிஸ் மா அதிபர் கடந்த ஏப்ரலில் இருந்து ஒழுங்கு ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

காலை 8.30 முதல் -8.45 வரை இது இடம்பெறுகிறது. தேசியக்கீதம் இசைக்கப்பட்ட பின்னர் இது நடைபெறுகிறது.

இதன்போது பௌத்த அலுவலர்கள் தியானம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏனைய சமய அலுவலர்கள் தமது மத அனுஸ்டானங்களில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *