வவுனியாவில நீண்ட காலமாக பொதுமக்களிடம் கொள்ளையடித்தல்,செல்வந்தர்களை அச்சுறுத்தி பணம் பறித்தல் அப்பாவித் தமிழ் இளைஞர்களை இராணுவத்திடம் காட்டிக் கொடுத்தல் ஆகிய சமூக விரோத வேலைகளை செய்து வருகின்ற ஸ்ரீடெலோ என அழைக்கப்படும் பா.உதயராசா என்பவரின் ஒட்டுக் குழுவினர் நேற்று வவுனியா நகர மண்டபத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை குழப்பியுள்ளார்கள்.
அரசியலுக்கு வரமுன்னரே சகல இனமக்களோடும் நல்லுறவுகளை பேணி பல சேவைகளை ஆற்றி வரும் முன்னாள் பிரதி அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களிடம் தமிழ் மக்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்டு தர்க்கம் செய்து கூட்டத்தை அவரை பதிலளிக்க விடாமல் திட்டமிட்டு கடப்புலித்தனமாடியுள்ளர்.
முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றிய காலப்பகுதியில் தமது எழுபதத்தைந்து வீதமான சேவைகளை தமிழ் மக்களுக்கு ஆற்றியுள்ளமை தெட்டத் தெளிவாக இருந்தும் கடந்த காலங்களில் தமிழ் மக்களிடம் நயவஞ்சகமாக நடந்த வரலாறு ஒன்றையே தமது பெருமையாக வைத்திருக்கும் இந்த ஸ்ரீடெலோ கும்பல் தமக்கு பிடிக்காத அப்பாவி தமிழ் இளைஞர்களை மெதுவாக இராணுவத்திடம் மாட்டி விட்டு அவர்களை காதர் மஸ்தான் அவர்கள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுவது வஞ்சகத்தின் உச்சமாகும் என்பதை அனைத்து நல் மனங் கொண்ட தமிழ் சகோதரர்களும் நன்கறிவார்கள்.
எவ்வாறாயினும் அப்பாவி மக்களிடம் இனவாதம் கக்கும் இந்த ஈனப்பிறவிகள் பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாது என்பதை அக்கும்பல் உணர மறுத்தாலும் தமிழ் மக்கள் இந்த கும்பலை நன்றாக விளங்கி வைத்துள்ளார்கள் என்பது வெள்ளிடை மலையாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்து அரசோடு தேனிலவு கொண்டாடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது உறவுகளான அப்பாவி இளைஞர்களை இந்த ஸ்ரீ டெலோ உள்ளிட்ட ஒட்டுக்கும்பல் காட்டிக் கொடுத்து சிறைகளில் அடைக்க வைத்த கதைகளை நன்கறிந்தும் வாய்மூடி இருப்பதையும் தமிழ் மக்கள் நன்கறிவர்.
வரும் தேர்தல் இவர்களுக்கு பாடம் புகட்டும்.
ப.இளமாறன்