உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பணக்கார பெயரை இழந்த முகேஷ் அம்பானி! மீண்டும் வேறு ஒருவர்

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெயரை இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இழந்துள்ளார்.

சமீபத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவை சந்தித்த முகேஷ் அம்பானி, அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதே நிலையில், இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த சீனாவை சேர்ந்த தொழிலதிபரான ஷாங் ஷான்ஷானின் (Zhong Shanshan) தடுப்பூசி மற்றும் தண்ணீர் போத்தல்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயரவே தற்போது அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஷான்ஷானின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 7 பில்லியன் டொலர்கள் அதிகரித்ததையடுத்து, அவர் பட்டியலில் தனக்கு முன்னிருந்த முகேஷ் அம்பானி, சீனாவின் ஜாக் மா ஆகியோரை பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக 77.8 பில்லியன் டொலர்கள் சொத்து மதிப்பு கொண்டுள்ள ஷான்ஷான், இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலிலும் 11ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அது குறித்த தகவலை பராமரிக்கும் ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷான்ஷான் இதழியல் துறை, காளான் வளர்ப்பு மற்றும் சுகாதாரத்துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை சீன பங்குச்சந்தையில் பட்டியலிட்டார் ஷான்ஷான்.

மூன்று மாதங்களுக்கு பிறகு, தனது மற்றொரு நிறுவனமான தண்ணீர் போத்தல் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட்டார் ஷான்ஷான்.

இதன் மூலம் திரட்டப்பட்ட பணத்தின் மூலம், ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மாவை நெருங்கினார் ஷான்ஷான்.

மறுபுறம் ஹாங்காங் பங்குச்சந்தை வரலாற்றில் சிறப்பான அறிமுகத்தைக் கண்ட பங்குகளின் பட்டியலில் இணைந்த ‘நொங்ஃபூ ஸ்ப்ரிங்’ என்ற அவரது தண்ணீர் போத்தல் நிறுவனத்தின் பங்கின் மதிப்பு தொடக்க விலையை விட 155 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது.

அதேபோன்று, கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் இறங்கிய ஷான்ஷானின் மற்றொரு நிறுவனத்தின் பங்கின் விலை 2,000% மேல் அதிகரித்து போட்டி நிறுவனங்களை வியப்படையச் செய்தது.

இந்த வியத்தகு சொத்து மதிப்பு உயர்வின் காரணமாக தற்போது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ஷான்ஷான். மேலும், இது வரலாற்றில் குறுகிய காலத்தில் அதிக செல்வம் ஈட்டப்பட்ட நிகழ்வாக பதிவாகியுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஈரான் தாக்குதலுக்கு அஸ்வர் கண்டனம்

wpengine

றிஷாட் வெளிநாடு செல்ல முடியாது தடை

wpengine

ஆளுநர் பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை

wpengine