பிரதான செய்திகள்

பணக்காரர்கள், மோசடியாளர்களுக்கு சலுகை! கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கை

நாட்டின் நிதி நெருக்கடியை தீர்க்க முயற்சிப்பதற்கு பதிலாக, சில பணக்காரர்கள் மற்றும் மோசடியாளர்களுக்கு சலுகை வழங்குவதன் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கொழும்பில் இன்று (07) தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நிதி சட்டமூலம் தொடர்பில் கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் மோசடி செய்பவர்கள், தங்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

வரி செலுத்தாமல் யாராவது மறைந்திருந்தால், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் அதற்கு போதுமான ஏற்பாடுகள் உள்ளன என்றும் குறிப்பிட்ட அவர், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் இந்தக் கொள்கையை கடுமையாக எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related posts

மீள்குடியேற்றம் செய்தபோது ஞானசார தேரர் விமர்சிக்கின்ற நிலை! வாய்கூசாமல் சொல்லுகின்றார்கள் நான் சேவை செய்யவில்லை என்று அமைச்சர் றிஷாட்

wpengine

ரணிலின் திட்டத்தை ரத்துசெய்த மைத்திரி! பிரயோசனமில்லை

wpengine

புல்மோட்டை இப்தார்! மாகாண சபை உறுப்பினர் அன்வரின் அறிக்கை சோடிக்கப்பட்டதா?

wpengine