பிரதான செய்திகள்

பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்கள்! வெளிவாரிப்பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும்

பட்டதாரி பயிலுனர்களாக நியமனங்கள் வழங்குதலில் வெளிவாரிப் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பட்டதாரி பயிலுனர்கள் நியமனங்கள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவுள்ளது.

இதில் வெளிவாரி பட்டதாரிகள் உள்ளீர்க்கப்படவில்லை. அமைச்சரவையில் அனுமதியைப் பெற்றது போல் 2000 வெளிவாரி பட்டதாரிகளும் இதில் உள்வாங்கப்படல் வேண்டும்.

இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியை தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இருந்த போதிலும் அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.

இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட செயலாளரை சந்தித்து வெளிவாரி பட்டங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவுள்ளேன்.

16200 பட்டதாரிகள் இதில் நியமனங்களை பெறவுள்ள நிலையில் மேலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்வாரி வெளிவாரி என தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தினால் உள்வாங்கப்படுவதற்கான ஆயத்தங்களும் நடை பெற்று வருகின்றன.

உள்நாட்டலுவல்கள், கல்வி சுகாதாரம் போன்ற திணைக்களங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

நிதியமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை – அமைச்சர் றிசாட்

wpengine

மர்ஹூம் அஷ்ரப் மரணம்! திடுக்கிடும் சில உண்மைகள்

wpengine

மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது – அரசாங்கத்தை குற்றம்சாட்டும் சஜித்!

Editor