பிரதான செய்திகள்

பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டி பரீட்சை விரைவில்!

உயர்தரத்தின் சில பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, உயர்தரத்தின் கணிதம், விஞ்ஞானம், சர்வதேச மொழிகள், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்காக ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதன்படி மாகாண மட்டத்தில் 5450 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு அமைவாக 35 வயதுக்கு குறைவான, தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த போட்டிப் பரீட்சைக்காக எதிர்வரும் சில வாரங்களில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன

Related posts

அமைச்சு பதவிகளை அப்படியே தருகிறோம்! விக்னேஸ்வரன் பக்கம் வாங்க

wpengine

வவுனியாவில் பாடசாலை அதிபரின் அலுவலகம் தீ

wpengine

திருகோணமலை இந்து கல்லூரியின் அபாயா விவகாரம் வட மாகாண சபையில் நியாஸ் சீற்றம்

wpengine