பிரதான செய்திகள்

பட்டதாரிகளுக்கு இதே! சந்தர்ப்பம் நிங்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

அரசாங்கம் நாட்டிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை மாவட்ட அடிப்படையில் பயிற்சியளித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு அதற்கான விண்ணப்பங்களை தற்போது கோரியுள்ளதுடன், விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 8ஆம் திகதியென குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசதுறையில் அல்லது தனியார் துறையில் இதுவரை ஏதேனும் சேவையில் (தொழில்) இணைந்திராத பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 – 35 வரை வயதுள்ள ஆண், பெண் இருபாலாரும் தீவில் எந்தப் பகுதியிலும் பணியாற்றக் கூடியதாக உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவாகும் பட்டதாரிகளுக்கு ஒரு வருட பயிற்சி வழங்கப்படுவதுடன், பயிற்சி நடைபெறும் கால கட்டங்களில் மாதமொன்றுக்கு 20,000 ரூபா மட்டும் கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளர்.

Related posts

மதம் , சமையம் சார்ந்த புத்தகங்கள் இறக்குமதிக்கு தடைகள் நீக்கம் .

Maash

4 வகையான குற்றங்களுக்கு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்திய பொலிஸ்!

Editor

உலகளாவிய வர்த்தகத்தில் பல்வேறு மாற்றங்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

wpengine