பிரதான செய்திகள்

பசில் ராஜபஷ்சவின் 40லச்சம் ரூபா பெறுமதியான கடையுடன் வீட்டு தொகுதி விரைவில்

நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் ‘ பிரிவிலும் ஒரு பாதையை அபிவிருத்தி செய்து, ஒரு வீட்டை மற்றும் அதையொட்டிய ஒரு வியாபார நிலையத்தையும் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நேற்று (8) ஆரம்பமானது.

நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் குறைந்த வருமானத்தைப் பெறுகின்றவர்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் மொத்தமாக 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் காணப்படுகின்றன.

இந்த பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் குறைந்த வருமானத்தையுடைய குடும்பமொன்றிற்கு, இந்த வீடு மற்றும் வியாபார நிலையம் வழங்கப்படும். இங்கு ஒரு வீடு மற்றும் வியாபார நிலையத்தைக் கட்டி முடிப்பதற்கு செலவாகும் தொகை கிட்டத்தட்ட ரூ 40 இலட்சம் ஆகும்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைப்பாக, பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச அவர்களால் குறித்த திட்டம் வடிவைக்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத் திட்டத்திற்கு ‘எங்கள் கிராமம் – எங்கள் கடை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Related posts

ரணிலின் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்ளவில்லை

wpengine

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும்´ஒலுசல´திறக்கப்படும்

wpengine

தற்கொலை! ஊடகங்களில் வெளியிட வேண்டாம்

wpengine