பிரதான செய்திகள்

பசிலின் வருகையின் பின்பு விமல்,கம்மன்பிலவின் துறைகள் பறிபோகும்

அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் வகித்து வரும் அமைச்சுகளில் மேலும் சில துறைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், அவர்களிடம் இருந்து பறிக்கப்படும் துறைகளை கொண்டு சில அமைச்சுக்களை உருவாக்கி அவற்றின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மேலும் சிலருக்கு அமைச்சு பதவிகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் பொருளாதார இலக்குகளை துரிதமாக அடையும் நோக்கில் அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டு உடன்படிக்கைக்கு அமைய அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சு பொறுப்புகளை புதிய அமைச்சரவை திருத்தத்தின் போது வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது சுகாதாரம், பொலிஸ், தொழில் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றிலும் திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக பேசப்படுகிறது.

புதிய அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக இளம் அமைச்சர்கள் அமைச்சரவைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை

wpengine

கோத்தபாய தொடர்பான ஆவணங்களை ஒப்படைப்பதற்கு தாம் தயார்

wpengine

வடக்கு கிழக்கில் கிடைக்கப்பெறும் ஆதரவின் ஊடாக சஜித் பிரேமதாச, கோத்தபாயவை பின்தள்ளி முன்னிலை வகிப்பார்

wpengine