Breaking
Sun. Nov 24th, 2024

மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களாதேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது.

அயர்­லாந்­துக்கு எதி­ராக பெல்ஃ­பாஸ்ட்டில் நடை­பெற்ற மூன்றா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் ருமானா ஹட்-ரிக் முறையில் விக்கெட்­களை சரித்­ததன் மூலம் 10 ஓட்­டங்­களால் பங்­க­ளாதேஷ் வெற்­றி­பெற்­றது.

மூன்று போட்­டிகள் கொண்ட இந்தத் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் மழை­யினால் தடைப்­பட்­டதால் பங்­க­ளாதேஷ் 1–0 என தொடரை வென்­றது.

பங்­க­ளாதேஷ் மகளிர் அணி­யினால் நிர்­ண­யிக்­கப்­பட்ட சுமா­ரான 107 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய அயர்­லாந்து மகளிர் அணி ஒரு கட்­டத்தில் 4 விக்கெட்­களை மாத்­திரம் இழந்து 84 ஓட்­டங்­களைப் பெற்று வலு­வான நிலையில் இருந்­தது.

ஆனால், இட­து கை சுழல்­பந்­து ­வீச்­சா­ள­ரான ருமானா அஹ்மத் அடுத்­த­டுத்து மூன்று பந்­து­களில் கிம் கார்த், க்ளயார் ஷிலிங்டன், மேரி வோல்ட்ரன் ஆகி­யோரை ஒரே வித­மாக எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்­ட­மி­ழக்கச் செய்து தனது அணிக்கு சாதகத் தன்­மையை ஏற்­ப­டுத்­தினார்.

அயர்­லாந்து மகளிர் அணியின் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 12 ஓட்­டங்­க­ளுக்கு சரிக்­கப்­பட்­டமை விசேட அம்­ச­மாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *