பிரதான செய்திகள்

நோபல் பரிசுக்கு மைத்திரியின் பெயர்

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசிற்காக தெரிவு செய்யப்படப்படக் கூடியவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த பரிசிற்காக தகுதி பெற்றவர்களின் பட்டியலொன்றை ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது.

குறித்த நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த பரிசை வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கிளிநொச்சியில் பேரணி!

Editor

தௌஹீத் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மைதானத்தில் தொழுகை

wpengine

துருக்கி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

wpengine