பிரதான செய்திகள்

நெற்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் விரைவில்! அமைச்சர் ஜானக்க வக்கும்புர

நெற்செய்கைக்கு தேவையான இரசாயன உரத்தை விரைவில் வழங்குவதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

சிறுபோக உற்பத்திக்கு தேவையான திண்ம மற்றும் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

65,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக்க வக்கும்புர மேலும் தெரிவித்தார்.

Related posts

மன்னார் சோதனைச் சாவடிக்கு அருகிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

Editor

மன்னாரில் புரெவி தாக்கம்!மாந்தை மேற்கு பகுதியில் கால்நடை பாதிப்பு

wpengine

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற எதிரியே! விக்னேஸ்வரன்

wpengine