Breaking
Sun. Nov 24th, 2024

மஹியங்கணையில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தின் காரணமாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பயணிகள் தேனீர் அருந்துவதற்கான நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் இருந்து தியதலாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வானும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் நேற்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக இரட்டை பெண் குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மட்டக்களப்பை சேர்ந்த இவர்கள், நுவரெலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு வீடு திரும்பிய போதே இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து ஏற்படுவதற்கு முன்னர் குடும்பமாக நுவரெலியாவில் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

மிகவும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இலங்கையர்களை கண்ணீர் ஆழ்த்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *