பிரதான செய்திகள்

நுரைச்சோலை சவுதி வீடமைப்புத் திட்டம் டிசம்பா் 31 முன் பகிா்ந்தளிக்கப்படும் அம்பாறை அரச அதிபா்

(அஷ்ரப் ஏ சமத்)

அக்­க­ரைப்­பற்று நுரைச்­சோ­லையில் சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணையில் அமைக்­கப்­பட்டு கைய­ளிக்­கப்­ப­டா­துள்ள வீட்டுத் திட்­டத்தை இந்த வருட இறு­திக்குள் மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு ஜனா­தி­பதி அறி­வு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் இதற்­க­மைய அம்­பாறை மாவட்­டத்தில்  வாழும் மக்­களின் சனத்­தொகை விகி­தா­சா­ரத்­திற்­கேற்ப இவ் வீடு­களை பகிர்ந்­த­ளிக்க தாம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் அம்­பாறை மாவட்ட செய­லாளர் துசித்த பீ. வணி­க­சிங்க நேற்று முன்­தினம் தெரி­வித்­தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இவ் வீட­மைப்­புத்­திட்டம் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டா­துள்­ளமை பற்றி கடந்த காலங்­களில் பல்­வேறு ஊட­கங்­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­த­துடன்  பாரா­ளு­மன்­றத்­திலும்  கேள்வி  எழுப்­பப்­பட்­டி­ருந்­தது. சர்­வ­தேச ஊட­கங்களும் இது பற்றி செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன.

அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ் வீட­மைப்புத் திட்­டத்­தினை உயர் நீதி­மன்றத் தீர்ப்பின்­படி பகிர்ந்­த­ளிக்கும் படி எனக்கு அறி­வித்­துள்ளார்.

அதற்­க­மை­வாக  அம்­பாறை மாவட்­டத்தில் வாழும் மூன்று சமூ­கங்­க­ளுக்கும்  இவ் வீடுகள்  பகிர்ந்­த­ளிக்­கப்­படும்.  அத்­துடன் இவ் வீட­மைப்­புத்­திட்டம் சம்­பந்­தமாக கடந்த வாரம் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுடன் நான் கலந்­து­ரை­யா­டினேன். எதிர்­வரும் டிசம்பா் 31ஆம் திக­திக்கு முன்னர்  இதி­லுள்ள 500 வீடு­களும், பாட­சாலை, வைத்­தி­ய­சாலை, பள்­ளி­வாசல் என்­பவும்  மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­படும் என அவர் மேலும் குறிப்­பிட்டார்.

சவூதி அர­சினால் அக்­க­ரைப்­பற்று நுரைச்­சோ­லையில்  வழங்­கப்­பட்ட சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான சவூதி வீட­மைப்புத் திட்டம் கடந்த 8 வரு­டங்­க­ளாக எவ­ருக்கும் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டாது காடு வளர்ந்து அழி­வ­டைந்து காணப்­ப­டு­கி­றது.

கடந்த 2004 சுனாமி அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக அப்போது வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்­ச­ராக இருந்த பேரியல் அஸ்­ரபின் முயற்­சி­யினால் 1000  மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான ”கிங் ஹூசைன் வீட­மைப்புத் திட்­டம்”  நிர்­மா­ணிக்க­ப்பட்­டது.

இவ் வீட­மைப்புத் திட்டம் முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி சக­ல­ருக்கும் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் எனக் கோரி அச்­ச­மயம் சிஹல உறு­மய கட்­சி­யினால் உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. அப்­போ­தைய பிர­தம நீதி­ய­ர­ச­ராக இருந்த சரத் என். சில்வா  இத் திட்­டத்­தினை மூன்று இனத்திற்கும் அவரவர்களது இன விகிதாசாரத்திற்கேற்ப  சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் படி தீர்ப்பு வழங்கினார்.

இத் தீர்ப்பு வழங்கப்பட்டு 8 வருடங்களாகின்ற போதிலும் இதுவரை வீடுகள் பகிர்ந்தளிப்பதில் இழுபறி நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.nurasolai1-1

Related posts

வவுனியாவில் கணவன்,மனைவி சடலமாக மீட்பு

wpengine

திருகோணமலை பாட்டாளிபுரம் கிராம மக்களுக்கு சமுர்த்தி இல்லை! பிரதேச மக்கள் விசனம்

wpengine

தாஜுதீன் கொலை! சில நாட்களில் பிரபுக்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கைது

wpengine