பிரதான செய்திகள்

நுண்கடனுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

நுண்கடன் திட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் இன்று காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றுள்ளது.

வந்தாறுமூலை பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணி அம்பலத்தடி, நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி, சந்தை வரை சென்று, மீண்டும் நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் முடிவடைந்துள்ளது.

இது தொடர்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நுண்கடனை திருப்பி செலுத்த முடியாமல் 17 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

இதனைத் தவிர குடும்பங்களில் விரிசல், சமூக சீர்கேடுகள், நுண்கடன் பெற்ற பலர் மன உளைச்சாலுக்கு உள்ளான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்கும் போது உரிய செயற்றிட்டத்தை ஆராய்ந்த பின்னரே, கடன்களை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் பொது செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பம்!

Editor

தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த நாம் விரும்பவில்லை

wpengine

போதைப்பொருள் கடத்தல்! உரியவர்களின் சொத்து முடக்கப்படும்.

wpengine