Breaking
Sat. Nov 23rd, 2024

பண்டிகைக் காலத்திலும், அதன் பின்னரும் நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களில் சுமார் 2500இற்கும் அதிகமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் இந்த மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை, அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

A B

By A B

Related Post