பிரதான செய்திகள்

நீ ஒரு இனவாதி, மதவாதி! றிஷாத் மீது கதிரை வீச்சு! நடந்தது என்ன?

 

(ஏ. எச். எம். பூமுதீன்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மீது கதிரையை தூக்கி வீச முட்பட்ட சம்பவம் ஒன்றை தற்போதைய கால சூழ்நிலையை கருதி மீள் பதிவிடுவது பொருத்தமாக உள்ளது.

அழுத்தகமை சம்பவம் நிகழ்ந்து 3 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும் பொதுபலசேனாவின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையிலும் இந்த பதிவை மீள் பிரசுரிப்பது பொருத்தமே.

19 .06 .2014 அன்று – அமைச்சர் ரிஷாத் மீது- தான் அமர்ந்திருந்த கதிரையை ஏனைய அமைச்சர்கள் முன் தூக்கி வீச முட்பட்ட அந்த நிகழ்வு அன்று நாடு பூராவும் பரவி முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில் மட்டுமன்றி இலங்கை அரசியலிலே பெரும் உணர்வலையையும் அச்சத்தையும் தோற்றுவித்திருந்தது.

இன்றும் கூட அந்த சம்பவத்தை நினைத்தால் மெய்சிலிர்க்கின்றது.
முஸ்லீம் சமூகம் நொந்து,வெந்து , வேதனைப்பட்டு இருந்த அந்த வேளையில் – அமைச்சர் ரிஷாத் மீதான இந்த தாக்குதல் முயற்ச்சி சம்பவமும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்திருந்தது.

3 வருடங்களுக்கு முன்னர்- இதே நாள் காலைப்பொழுதில் நடந்த அந்த சம்பவம் தமிழ், சிங்கள,ஆங்கில பத்திரிகைகளில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் இயங்கும் இணையத்தளங்களும் பரபரப்பான நிகழ்வாக இந்த சம்பவத்தை கோடிட்டு காட்டியிருந்தன.

முஸ்லீம் நாடுகளின் தூதுவர்கள் உட்பட பல்வேறு சர்வேதேச முஸ்லீம் அமைப்புகளும் இச்சம்பவத்தை அறிந்து பெரும் வேதனை அடைந்தனர்.

அமைச்சர் ரிஷாத் மீது அவ்வாறு கதிரையை தூக்கி வீசிய அந்த நபர் யார்? எதட்காக வீசினார்?

இதோ அந்த நிகழ்வு…..

அமைச்சரவைக் கூட்டம் 19 .06 .2014 அன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
அப்போது அங்கு பேருவளை மற்றும் அளுத்கமை சம்பவம் குறித்து அலசப்பட்டது.

இந்த வேளையில் குறிக்கிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் – ஜனாதிபதியை நோக்கி 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு பிறகு உங்களின் ஆட்சியில் தான் மீண்டும் ஒரு இனக்ககலவரமும் பேரழிவும் ஏற்பட்டுள்ளன.

அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்திற்கான முழுப்பொறுப்பையும் உங்கள் தலைமையிலான இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் காரணமானவர் ஞானசார தேரர். ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இனியும் நீங்கள் கைது செய்யாவிட்டால் இதைவிட மோசமான அழிவை இந்த நாடு சந்திக்கும் என்றார்.

அப்போது ஜனாதிபதி – அமைச்சர் ரிசாத் பதியுதீனைப் பார்த்து நீங்கள் முஸ்லிம்களுக்காக பேசுவதைப்போல் இங்குள்ள சிங்கள அமைச்சர்கள் சிங்கள மக்களுக்கு பேசத் தொடங்கினால் என்ன நடக்கும் என்று தெரியுமா எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், நீங்கள் அப்படி கூற முடியாது. நீங்கள் ஜனாதிபதி சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ் ,முஸ்லிம் மக்கள் என அனைவருக்கும் பொதுவானவர். நீங்கள் அனைவரையும் சமனாகவே பார்க்க வேண்டும். வாக்கை மையமாகக் கொண்டு நீங்கள் செயற்பட கூடாது என்றார்.

இந்த பதில் ஜனாதிபதிக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது.

கதிரையை விட்டு ஆவேசத்துடன் எழுந்த ஜனாதிபதி- ” உன்னுடைய பேச்சை உடன் நிறுத்து .வாயைப் பொத்து” என்று உரத்து சத்தம் இட்டு, “நீ ஒரு இனவாதி, நீ ஒரு மதவாதி ,உன்னுடைய செயற்பாடுகளை அவாதானித்துக் கொண்டுதான் வருகிறேன்” என சீறிப்பாய்ந்தார்.

இதன் பிற்பாடு அமளிதுமளி ஏற்பட்டது.

இந்த வேளை அமைச்சர் ரிசாதை நோக்கி கை நீட்டிய சம்பிக ரணவக்க, பொதுபல சேனாவை மட்டும் தடைசெய்ய முடியாது என்றார்.

இதனை கடுமையாக எதிர்த்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் , பொதுபலசேனாவை மட்டும் முடியாது என்றால் தடைசெய்வதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் ஏதும் இருக்கதின்றதா எனக் கேட்டார்.

எநதவொரு முஸ்லிம் அமைப்பும் இனவாதமாக செயற்படவில்லை எனக் கூறினார் . இதனால் மேலும் சர்ச்சை அமைச்சரவையில் அதிகரிக்கவே இந்த அமளி துமளியுடன் அமைச்சரவையும் கலைந்தது….

இதுதான் ரிஷாத் பதியுதீன்.
துணிச்சல், தைரியம் என்பவைகளின் மறுவடிவம் என்றால் அது ரிஷாத் பதியுதீனுக்குத்தான் அதிகம் பொருந்தும்.

இரும்புப் பெண்மணி என கூறப்பட்ட சந்திரிக்காவுடன் அன்று மர்ஹூம் அஷ்ரப் சமூகத்தின் உரிமைக்காக தர்க்கம் புரிந்தார். அதன் வழியில் , பின்வந்த காலங்களில் – உலகின் இரண்டாவது ஹிட்லர் என வர்ணிக்கப்பட்ட மஹிந்தவுடன் அமைச்சர் ரிஷாத் தர்கித்தார்.

முஸ்லீம் சமூகத்தை முன்னிலையைப்படுத்தி அன்று மர்ஹூம் அஷ்ரப் பிரேமதாசாவையும் சந்திரிகாவையும் ஆதரித்தார்..

அதேபோல், சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இரெண்டு அர்ப்பணிப்புகளை கடந்த காலங்களில் செய்து காட்டினார்.

ஹக்கீம்- பிரபா ஒப்பந்தத்தில் வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேட்டம் சிறுமைப்படுத்தப்பட்டபோது முகாவை விட்டு வெளியேறியமை முதல் அர்ப்பணிப்பு.

முஸ்லிம்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது மஹிந்த அரசை தூக்கி வீசியமை இரண்டாவது தியாகம்.

இப்பிடிப்பட்ட – அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முஸ்லீம் சமூகத்தின் நலனுக்காக நாளை எதையும் செய்வார் என்ற சமூகத்தின் மத்தியில் உள்ள நம்பிக்கை ஒருபோதும் அவநம்பிக்கை ஆகாது. அல்லாஹ் பெரியவன்.

Related posts

யாழ் பல்கலைக்கழக தொழுகையறை தாக்குதல்! அஸ்ரான் அஷ்ரப் கண்டனம்

wpengine

ஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

wpengine

மீண்டும் பாவனைக்கு வந்த சமூகவலைத்தளம்

wpengine