பிரதான செய்திகள்

நீல ஆடையில் தலைக்கு எண்ணெய் வைக்கும் மஹிந்த

புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையில் சுப நேரத்தில் நிறைவேற்றப்பட்டது

இந் நிகழ்வு பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (17) காலை நிகழ்த்தினார்.

காலை 7.16 மணிக்கு தெற்கு திசை நோக்கி நீல நிற ஆடை அணிந்து தலைக்கு ஆலம் இலை வைத்து ஆலம் சாறு மற்றும் எண்ணெய் வைத்து குளிப்பது இம்முறை புத்தாண்டு சடங்காகும்.

முதலில் புத்த மந்திரயவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதனை தொடர்ந்து தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வில் ஈடுபட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க மாதன்வல ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வெல்லகிரிய சுமங்கள தேரர் பிரதமருக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து ஆசீர்வதித்தார்.

உதவி கல்வி பணிப்பாளர் கிரியொருவே தீரானந்த தேரரும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சிரிபால கம்லத் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம்

wpengine

நாமல் ,அனுர சேனாநாயக்க ஆகியோரை கைது செய்யக் கூடிய சாத்தியம்

wpengine

அசுவெசும நிவாரண திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்க்க விசேட சுற்று நிரூபம்!

Editor