Breaking
Mon. Nov 25th, 2024

நான்கு வருடங்களாக நீர் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத நிலையில், எதிர்காலத்தில் நீர் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என்று, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்துறை அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பேராதனை நீர் வடிகாலமைப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர்
இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

முதல் அலகு நீர் பயன்பாட்டின் போது பெறுமதி சேர் வரி விலக்களிப்பதற்கு தீர்மானிக்க வேண்டியுள்ளது.அதேநேரம் முதல் 100 அலகுகளுக்கு இந்த கட்டணப் பட்டியல் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

நீர்கட்டணம் வெட் வரியின் பின்னர் ஓரளவு அதிகரித்துள்ளது. எனினும் கடந்த நான்கு வருடங்களாக நீர் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் வரி அதிகரிப்பை அடுத்து நீர் கட்டணத்தில் ஏற்படும் சிறிய அதிகரிப்பை பெரிய விடயமாக கொள்ள முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.13307478_1823622121204461_9211770092579090023_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *