பிரதான செய்திகள்

நீர்க்கட்டணம் அதிகரிப்பு! உணவுகளின் விலை அதிகரிக்கப்பட உள்ளது.

நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதால் உணவகங்கள் மற்றும் பேக்கரியில் இருந்து சந்தைப்படுத்தப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.

நீருக்கான செலவீனங்கள் அதிகரிப்பானது, வாடிக்கையாளர் மீது திணிக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என தேசிய நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீர்க்கட்டண அதிகரிப்பினால் உணவுகளின் உற்பத்தி செலவு அதிகமாகும்.

இதனால், நீர்க்கட்டண அதிகரிப்பினை முன்னிலைப்படுத்தி உணவிற்கான விலை தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வரிகள் அதிகரிக்கப்படுவதால் மக்கள் துன்பப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா புகையிரத்துடன் மோதி நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

wpengine

VPN ல் இலங்கை சாதனை

wpengine

தமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபையை கொடுக்க வேண்டும்

wpengine