பிரதான செய்திகள்

நீர்கொழும்பில் வசித்த 13 அகதிகளில் யாழ்ப்பாணத்தில்

நீர்கொழும்பில் வசித்த அகதிகளில் தற்போதுவரை 13 அகதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள சில வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கிற்கு அழைத்துவரும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, அவர்களில் சிலர் யாழ்ப்பாணத்திற்கும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் உள்ளடங்குகின்றனர்.

நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி நாட்டிலேற்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களையடுத்து அவர்களுக்கு தங்கிருந்த இடத்தில் எதிர்ப்பு நிலவிய நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, அவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்களை வடக்கிற்கு அழைத்துவரும் முயற்சியை அரசு மற்றும் ஐ.நா. மேற்கொண்டன. இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு ஆளுநருடன் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், அவர்கள் சம்மதித்த போதும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். அந்த எதிர்ப்பை மீறி வவுனியாவில் ஒரு தொகுதி அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே யாழ்ப்பாணத்திற்கும் அகதிகள் அழைத்துவரப்படுகின்றனர்.

முதற்கட்டமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் அழைத்துவரப்பட்டு வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் குறித்த அகதிகளில் சிலர் யாழ்ப்பாணத்திலுள்ள வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிலர் தாம் அவர்களைப் பொறுப்பெடுப்பதாகவும் சுயமாகவே தமது வீடுகளில் தங்கவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் அனுரகுமார

wpengine

மஹிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளராக ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்

Editor

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சினை! அகிலவை சந்திக்க திர்மானம்

wpengine