செய்திகள்பிரதான செய்திகள்மன்னார்

நீர்கொழும்பில் பெருந்தொகை சட்டவிரோத மாத்திரைகளுடன் மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது .

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொப்பரா சந்தி பகுதியில், சட்ட விரோத மருந்து மாத்திரைகளை வேனின் ஏற்றிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் சனிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மன்னார் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து 500,000 சட்ட விரோத மருந்து மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

கரம் போட்டியில் வவுனியா! மாணவி வெண்கல பதக்கம்

wpengine

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும்

wpengine

மன்னார் நகரசபை தலைவருக்கு எதிராக, நகரசபையின் முன்னாள் தலைவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

Maash