செய்திகள்பிரதான செய்திகள்

நீதி உறுதி செய்யப்படாவிட்டால் வீதிகளில் இறங்கி போராடுவது அவசியமாகிவிடு – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்தோடு, நீதி உறுதி செய்யப்படாவிட்டால் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவது அவசியமாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

நாட்டை ஆண்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் அவர்கள் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.

அந்த அமைப்பை மாற்றுவதற்காகவே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தோம். இருப்பினும், அமைப்பு மாறவில்லை என்றால் தாமும், தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அன்று கட்டுவாப்பிட்டியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்தில் ஜனாதிபதி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இன்னும் கோருவதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் அரசாங்கம் நியாயமான பதிலை வழங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தி அடைவார்கள்.

இருப்பினும், அது நடக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் எச்சரித்துள்ளார்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய:

Related posts

ஐக்கிய தேசிய கட்சி அச்சமடைவதில்லை

wpengine

சந்திரிக்கா தலைமையிலான கூட்டணி சஜித்துக்கு ஆதரவு

wpengine

ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் கிளிநொச்சியை வந்தடைந்தனர்..!

Maash