பிரதான செய்திகள்

நீண்ட காலம் போராடினேன். இனியும் போராடும் மனநிலை இல்லை.

கடந்த காலங்களில் தான் சொன்னது போன்று தற்போது அனைத்தும் நடந்து விட்டதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு ஏற்படப் போகும் ஆபத்து குறித்து கருத்து வெளியிட்ட போது அவமானப்படுத்தினர்.

இறுதியில் தான் நாடு தொடர்பில் வெளியிட்ட தகவல்கள் உண்மையாகி விட்டதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மிகுந்த கவலை அடைகிறேன், எனினும் எதிர்வரும் காலங்களில் பொறுமையாக செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் களைத்து விட்டேன், நீண்ட காலம் போராடினேன். இனியும் போராடும் மனநிலை இல்லை. தியானம் செய்து வாழத் தீர்மானித்து விட்டதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தேரர் என்ற ரீதியில் தான் சிங்களவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தேன். உயிர் தியாகம் செய்து காப்பாற்றுவது என்றாலும் நாடு இருக்க வேண்டும். அனைவருக்கும் இதனை இறுதியாக கூறிக்கொள்கிறேன் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர், தனது விகாரைக்கு சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

Related posts

மலையக அசீஸ்ஸின் 26வது நினைவு! மாணவர்களுக்காக உபகரணம் வழங்கி வைப்பு

wpengine

அனர்த்த பொருட்களை திருடிய கிராம உத்தியோகத்தர் கைது!

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை!-காஞ்சன விஜேசேகர-

Editor