Breaking
Sat. Nov 23rd, 2024

தொழில்தேடும் பட்டதாரிகள் மற்றும் (கற்கை நெறி) டிப்ளோமாதாரிகளின் விண்ணப்பங்கள் அவர்களை அரச நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளும் வகையில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.


இது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ளது.
இளையவர்களை நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக் கொள்ளும் செயற்திட்டத்தின் கீழேயே இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


விண்ணப்பத்தாரிகள் 31.12.2019 இற்கு முன்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளாக அல்லது டிப்ளோமாதாரிகளாக இருக்கவேண்டும்.


35வயதுக்கு மேற்படாதவர்களே இதற்கு விண்ணப்பிக்கமுடியும்.
விண்ணப்பங்களுடன் பட்டய சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழ்கள் சமாதான நீதிவான் அல்லது சட்டத்தரணி ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்படவேண்டும்.


விண்ணப்பங்கள் அஞ்சல் திணைக்களத்தின் ஸ்பீட் போஸ்ட் ஊடாக 14.02.2020க்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை https://www.presidentsoffice.gov.lk/ என்ற இணைத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்பங்கள்:- The Programme to provide jobs for unemployed graduates and diploma holders 2020, Corporate management and Co-ordination Division, Presidential Secretariat, Galle Face, Colombo 01. என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும்.


விண்ணப்பத்தாரி பட்டதாரி எனில் விண்ணப்ப உறையின் இடதுபக்க மேல்மூலையில் பட்டதாரி என்றும் மாவட்டமும் குறிப்பிடப்படவேண்டும்.
இந்த விண்ணப்பங்களின் படி தொழில்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படுபவர்கள் கிராம மற்றும் தோட்டப்புற பாடசாலைகளுக்கும், அரசாங்க திணைக்களங்களுக்கும் பணிகளுக்காக சேர்த்துக் கொள்ளப்படுவர்.


இந்தநிலையில் அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 20ஆயிரம் ரூபா வழங்கப்படும். ஒரு வருட பயிற்சி பணியின் பின்னர் ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு 5 வருட கட்டாய பணியில் அவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *