பிரதான செய்திகள்

நீங்கள் அதிஷ்டசாலிகள் உங்களை நேசிக்கின்ற ஜனாதிபதியை பெற்றுள்ளீர்கள் – அமீர் அலி

(நாச்சியாதீவு பர்வீன்)

நீங்கள் அதிஷ்டசாலிகள் உங்களை நேசிக்கின்ற ஜனாதிபதியை பெற்றுள்ளீர்கள்.இந்த நாட்டு மக்களையும்,இந்த மாவட்டத்து மக்களையும் வெகுவாக நேசிக்கின்ற ஒரு விவசாய மகன் அவர், இந்தப்பிரதேசத்தில் விவசாயத்துறையை முன்னேற்றும் பல வேலைத்திட்டங்கள் எதிர் காலத்தில் கெளரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம் பெற உள்ளன. அந்த வகையில் கெளரவ ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்களுக்கு நன்றியுடைய மக்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற உயர்ந்த உள்ளம் அவரிடம் இருக்கிறது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பொலன்னறுவையில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் வகையில் நவீன தொழிநுட்பங்கள உபயோகித்து அமைக்கப்பட்ட யோகட் தயாரிக்கும் நிறுவனத்தை திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்

பெரியதொரு மாற்றத்தை நாம் கொண்டுள்ளோம். அதன் பிரதான கர்த்தா அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்கள். ஒரு விவசாயக்குடும்பத்தின் மகனாகிய அவர் மிகவும் எளிமையானவர், நல்ல சிந்தனை கொண்டவர். இந்த மாவட்டத்தின் கிராமங்களில் இருக்கின்ற ஒவ்வொறு விவசாயியும் நல்ல வாழ்க்கைத்தரத்தை கொண்டிருக்க வேண்டும் என விரும்புகின்றவர். இந்த நல்லாட்சியில் இந்தப்பிரதேசமானது பாரிய அபிவிருத்தியை காணவுள்ளது. அவ்வாறே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கிலும் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எல்லா இனத்தையும்,எல்லா மதத்தினையும் சமமாக மதிக்கின்ற,நேசிக்கின்ற இவ்வாறான ஒருவர் இந்தப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருப்பது நீங்கள் செய்த பாக்கியமாகும்.

இந்தப்பிரதேசத்திலுள்ள விவசாயத்தையும்,சேனைப்பயிரச்செய்கையையும் உயர்ந்த தரத்தில் மேற்கொள்ளும் நோக்கில் அண்மையில் மொறகஹகந்த-களுகங்கை நீர்பாசனத்திட்டம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. துரித மகாவலித் திட்டத்தினை அடுத்து மேற்கொள்ளப்படுகின்ற மிகப்பெரிய நீர்பாசன திட்டம் இதுவாகும். இதன்மூலம் பல இலட்சம் விவசாயிகள் நன்மையடைவார்கள்.

இந்தப்பிரதேசத்திலுள்ள பால் உத்பத்தியாளர்கள் தொடர்பில் எமது அமைச்சு மிகவும் கரிசனையோடு செயற்படுகிறது. அதில் முதல் கட்டமாகவே இரண்டு பால் சேகரிப்பு நிலையங்களுக்கான பால் பதனிடும் இயந்திரம் இன்று வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்குவிப்பு பணமும் வழங்கப்பட்டது. இன்னும் பல சலுகைகளை எதிர் காலத்தில் நாம் வழங்க உத்தேசித்துள்ளோம் என கூறினார்.cefebe0d-2da4-4b47-bdae-dd5ec31bae7a

இந்த நிகழ்வின்போது பயனாளர்களுக்கு கறவை மாடுகள்,ஆடுகள்,கோழிக்குஞ்சுகள், பால் கொண்டு செல்லும் கேன் என்பன பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அமைச்சின் செயலாளர் ரேனுகா ஏக்கநாயக்க,மில்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.9c6d45a4-ceac-433e-837f-37bd0dea707b

Related posts

அதிகாரம் தன்னிடம் இருந்திருக்குமாயின்! ஆளும் கட்சியில் பலர் இருந்திருக்க மாட்டார்கள்

wpengine

சிங்கள இளைஞர்களின் “நைய்யாண்டி” மன்னாரில் பதட்டம்

wpengine

நாடாளுமன்றக் கலைப்பு! அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றம்

wpengine