பிரதான செய்திகள்

நிவாரணப்பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் இலங்கைக்கு வந்தன

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் ஜப்பான் மற்றும் இந்திய விமானங்கள் இலங்கை வந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் முதலாவதான ஜப்பான் நாட்டு விமானம் நேற்று இரவு 8 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாகவும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்று இன்று காலை 4.45 மணியளவில் விமான நிலையம் வந்தடைந்துள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, போர்வைகள், தண்ணீர் சுத்திகரிப்பிற்கு பயன்படுத்தும் மாத்திரைகள், மின்பிறப்பாக்கிகள் , தண்ணீர் தாங்கிகள் உட்பட பல நிவாரணப்பொருட்களை ஜப்பானில் இருந்து வந்த விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

Related posts

பேஸ்புக்கில் கூடவா பெண்களுக்கு இவ்வளவு பிரச்சினை உஷார்!

wpengine

ஆளுனருக்கு எதிராக 217 வழக்கு தாக்கல்

wpengine

சதொசவிற்கு நெல்களை வழங்க திட்டம்

wpengine