அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகக் கூறிய ஜனாதிபதி, மேலும் பலப்படுத்தி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முயட்சி .

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்ற அநுர குமார திசாநாயக்க, தற்போது அதனை மேலும் பலப்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்கிறார். அவ்வாறு பலவந்தமாக ஜனாதிபதியால் எதனையும் நடைமுறைப்படுத்த இடமளிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்ற அநுர குமார திசாநாயக்க, தற்போது அதனை மேலும் பலப்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்கின்றார். சட்டத்தை மாற்றியேனும் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்போம் என ஜனாதிபதி கூறுகின்றார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி என்பதற்காக சட்டத்தை மாற்றி அரசியலமைப்பினை மீறி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முடியாது.  எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு சஜித் பிரேமதாச தலைமையில் ஜனநாயக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வியட்நாமிலிருந்து தனியார் ஜெட்டில் ஜனாதிபதி நாட்டுக்கு வந்தார். அதற்கான செலவு குறித்து கேள்வியெழுப்பியபோது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பல்வேறு மழுப்பல் பதில்களையே வழங்கினார்.

அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை கூறிக்கொண்டிருக்காமல் உண்மையில் அந்த ஜெட் விமானத்துக்கான செலவை ஏற்றுக்கொண்டது யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

இது ஒருபுறமிருக்க மறுபுறம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இன்று உப்பைக் கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

உப்பு இறக்குமதியின் பின்னணியில் மாபியாக்கள் இருப்பதாக சந்தேகிக்கின்றோம். இதே நிலைமையே வாகன இறக்குமதியிலும் காணப்படுகிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகின்ற போதிலும், இவர்களுக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியவில்லையல்லவா?

நாட்டை நிர்வகிப்பது ஜே.வி.பி. நினைத்ததைப் போன்று இலகுவான விடயமல்ல என்பதை அவர்கள் இப்போதாவது புரிந்து கொண்டிருப்பர் என்று நம்புகின்றோம்.

சஜித் பிரேமதாச தலைமையில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட மேலும் பல உள்ளூராட்சி மன்றங்களில் நாம் ஆட்சி அமைப்போம் என்றார்.

Related posts

றிஷாட்டின் கைதுக்கு எதிராக மு.கா. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

20 ஆம் திகதி மஹிந்தவை சந்திக்கவுள்ள 16பேர்

wpengine

முஸ்லிம்கள் மீதும் பள்ளிகள் மீதும் தாக்குதல் நடாத்துவதை வண்மையாக கண்டிக்கின்றோம்.

wpengine