பிரதான செய்திகள்

நிறையவே மனிதர்களை சம்பாதித்த புத்தளம் நகர பிதா KA பாயிஸின் வபாத் தணிக்கவியலாத கவலையை தருகிறது – பா.உ முஷாரப் இரங்கல்!

இன்று எதிர்பாராத விதமாக நிகழ்ந்த புத்தளம் நகர சபையினுடைய நகர பிதா KA பாயிஸின் இழப்பு தணிக்கவியலாத கவலையை தருவதோடு அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என திகாமடுல்ல மாவட்ட பா.உ. SMM முஷாரப் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எமது தலைமையோடு அரசியல் பயணத்தில் ஈடுபட்டு பிற்காலத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அரசியல் பணியாற்றி, ஏராளம் மக்கள் சேவைகளை செய்து புத்தளம் மண்ணின் தலைமகனாக மிளிர்ந்தவர் நகர பிதா பாயிஸ்.

கட்சியரசியலுக்கு அப்பால் எல்லோருடனும் கனிவாக பழகிய பாயிஸ் என்கின்ற ஆளுமை, தனிப்பட்ட ரீதியில் என்னோடும் அன்பு பரிமாறிய நல்லுள்ளம் கொண்டவர்.

எதிர்கட்சிகளின் வசை அரசியலை விட்டும் தன்னை தவிர்த்துக்கொண்ட பாயிஸ் அவர்கள், சொல்லிவிட்டு செய்யாமல் விடுகின்றவர்கள் மத்தியில் தன்னை மக்கள் நலன் சேவைகளை செய்துகாட்டி நிரூபித்தவர்.

அவரின் இழப்பென்பதை ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது.

மேலான வல்லோன் றஹ்மான் உயர்ந்த சுவனபதியையும் ஒளிபொருந்திய கப்ரு வாழ்வையும் அவருக்கு நசீபாக்குவானாக.

Related posts

கிளிநொச்சி விபத்து; மூவர் பலி; டிப்பர் சாரதி கைது!

Editor

மெட்றிட் நெறிமுறையில் புலமைசார் சொத்துப் பதிப்புரிமையை உள்ளீர்ப்புச் செய்ய நடவடிக்கை றிஷாட்

wpengine

ஒலுவில் ஆர்ப்பாட்டம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது தலைமை புரிந்துகொள்ள வேண்டும்

wpengine