பிரதான செய்திகள்

நிர்வாண போட்டோவை சமூகவலை தளத்தில் வெளியிட்டவர் கைது.

தனது கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப் சமூக வலைதளத்தின் ஊடாக மற்றவர்களுக்கு வெளியிட்ட 32 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (10) மாத்தளை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது நிர்வாண புகைப்படங்களை யாரோ வட்ஸ்அப் மூலம் வெளியிட்டதாக கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான பெண்ணும் அவரது மைத்துனியும் சில காலமாக நண்பர்களாக இருந்ததாகவும் தற்போது தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மற்றும் முறைப்பாடு செய்த இருவரும் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

றிசாட்க்கு தொழுகையின் பின்னர் பிராத்தனை செய்யுங்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர்

wpengine

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் சேவைநலன் பாராட்டு

wpengine

ஜனாதிபதியினை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள்! சின்ன காரணங்களுக்காக முஸ்லிம்கள் கைது

wpengine