உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நியூயோர்க் வீதியில் முஸ்லிம் மத தலைவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் நியூயோர்க் வீதியில் முஸ்லிம் மதத் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயோர்க் நகரில் உள்ள ஓசோன் பூங்கா அருகேயுள்ள மசூதி ஒன்றில் இருந்து (உள்ளூர் நேரப்படி) நேற்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் அராபியர்கள் அணியும் பாரம்பரிய உடையுடன் வந்து கொண்டிருந்த மவுலாமா அகோன்ஜீ(55) மற்றும் அவரது உதவியாளரான தாரா உத்தீன்(64) ஆகியோரை வழிமறித்த துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள், மிக நெருக்கமாக நின்று இருவரையும் தலையில் சுட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மவுலாமா அகோன்ஜீ, தாரா உத்தீன் அருகாமையில் உள்ள ஜமாய்க்கன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

நியூயோர்க் நகரின் பிரசித்தி பெற்ற முஸ்லிம் மதத் தலைவரான மவுலாமா அகோன்ஜீ மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க-இஸ்லாமிய நல்லுறவு கவுன்சில், மேற்படி கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை  நியூயோர்க் நகர பொலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுபோன்ற தாக்குதல்களால் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக அச்சப்படுகின்றனர் என சில முஸ்லிம்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர்.

Related posts

உக்ரைனுக்கு அசைக்க முடியாத ஆதரவை அறிவித்தார் பிரிட்டன் பிரதமர்.

Maash

21 தாக்குதல் பாராளுமன்றத்தில் பேசியதற்கு ஹரினுக்கு அழைப்பாணை

wpengine

விவசாயிகளுக்கு, உரிய முறையில் நட்டயீடு கொடுக்கப்படவில்லை

wpengine