பிரதான செய்திகள்

நியமனக் கடிதங்களை வழங்கிய வட மாகாண ஆளுநர்

வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத் தேர்வில் தெரிவாகியவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கி வைத்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

முகாமைத்துவ உதவியாளர்கள், விவசாய போதனாசிரியர்கள், பயிற்சியாளர்கள், கடல்நீர் வளத்துறை போதனா ஆசிரியர்கள் என மொத்தம் 82 பேருக்கான நியமனக் கடிதங்களை ஆளுநர் வழங்கி வைத்துள்ளார்.

இதில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஏ.எக்ஸ் செல்வநாயகம், விவசாய அமைச்சின் செயலாளர் க.தெய்வேந்திரம், பதில் பிரதம செயலாளர் சரஸ்வதி மோகனதாஸ், இ.வரதீஸ்வரன் மாகாண சபை செயலாளர், ரூபினி வரதலிங்கம் மகளீர் விவசாய அமைச்சு, வடமாகாண திணைக்கள ஆணையாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

ட்ரம்பின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

wpengine

வவுனியா ,சதொச பகுதியில் மோட்டார் விபத்து

wpengine

இஸ்லாம் அன்பின் மார்க்கம் -ஒப்புக்கொண்ட போப் (விடியோ)

wpengine