பிரதான செய்திகள்

நிதி ஓதுக்கியவர் ஒருவர்! பெயர் பலகையில் பெயர் கூட இல்லை என்று முறுகல்

களுத்துறை – தொடம்கொட பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வின்போது அரசியல்வாதிகளுக்கிடையே முறுகல் நிலை தோன்றியது.

145 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொடம்கொட பிரதேச செயலகக் கேட்போர் கூடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

அமைச்சர் அவர்களே, நான் நிர்மாணித்த கட்டடம் அழகாகக் காட்சியளிக்கின்றதா? இது எனது மனதில் தோன்றிய எண்ணக்கருவாகும். தொடம்கொடவில் இந்த கேட்போர் கூடத்தை அமைப்பதற்கு 150 மில்லியன் ரூபாவை நானே ஒதுக்கினேன். நான் நிதி ஒதுக்கியமையினாலேயே நீங்கள் இன்று இதனைத் திறந்துள்ளீர்கள். எனினும், குமார வெல்கமவின் பெயர் இதில் காணப்படவில்லை. இது முற்றிலும் தவறாகும். எனினும், எதிர்காலத்தில் நாம் ஆட்சியமைத்தால் இந்தப் பலகையை மாற்றுவோம்.

குமார வெல்கமவின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

பின்னர், திறன் விருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது,

நாம் மகிழக்கூடிய சில நாடகங்களை இன்று பார்த்தோம். இந்த ஒன்றிணைந்த அரசாங்கத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் ஒன்றிணைந்து அமைதியாக இருக்க முடியாது. அதன் பெறுபேறாகவே இந்தக் கேட்போர் கூடத்தை இவ்வாறு பூர்த்தி செய்வதற்கு எமக்கு வாய்ப்புக்கிட்டியது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தொடர்ந்து உரையாற்றுகையில் குமார வெல்கமவின் கருத்திற்கு பின்வருமாறு பதிலளித்தார்.

இதனை எவர் ஆரம்பித்த போதிலும் இது எமது தனிப்பட்ட சொத்து அல்ல. எமது நிதி அல்ல. இது பொதுமக்களின் சொத்தாகும். அவரின் கருத்துக்க அமைய அவர் மன வேதனையுடனுள்ளமை விளங்குகின்றது. அது தொடர்பில் நான் வருத்தமடைகின்றேன்

Related posts

நல்ல மனிதர்களை உருவாக்கும் தொழிற்சாலை பாடசாலை -எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

wpengine

திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது பாலம் செய்யப்படும் – அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine

4 மாவட்டங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம்!-காஞ்சன விஜேசேகர-

Editor