பிரதான செய்திகள்

நிதி ஒதுக்கீட்டுக்கான உபகரணங்களை வழங்கி வைத்த முன்னால் மாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மாதர் சங்களுக்கான சமையல் உபகரணங்கள்,தளபாடங்களையும் இன்று காலை முசலி பிரதேச செயலகத்தில் வைத்து வட மாகாண சபையின் முன்னால் உறுப்பினரும்,கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சரின் பிரத்தியோக செயலாளருமான றிப்ஹான் பதியுதீன் வழங்கி வைத்தார்.

இதற்கான நிதியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனும்,வட மாகாண சபையின் முன்னால் உறுப்பினர் றிப்ஹான் பதியுதீனுடைய நிதியிலும் இதற்கான உபகரணங்களை  முசலி,அளக்கட்டு, பிச்சைவாணிபங் நெடுங்குளம்,பெற்கேணி ஆகிய பள்ளிவாசல்களுக்கு சாப்பாட்டு சமையல் உபகரணங்களையும் அத்துடன் வேப்பங்குளம் மாதர் சங்கத்திற்கு தளபாட உபகரணங்களையும் வழங்கி வைத்தார்கள்.

இன் நிகழ்வில் முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் முஜாஹிர் மற்றும் முசலி பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆன பைருஸ்,சுபியான்,பாயிஸ் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகம் என  ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.

Related posts

ஹசன் அலியின் நிந்தவூர் பேச்சு (விடியோ)

wpengine

வவுனியாவில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள்

wpengine

அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு 75 ஆண்டுகளாக இலங்கையில் இல்லாத VAT வரி…

Maash